கண்ணபிரான் திவ்ய அம்ருத காணிக்கை
இல்லாத மலர் கொண்டு அர்ச்சிக்கலாமே! ஒரு பெரியவர் வருத்தத்துடன் பேசினார். ஊரே விஷக் கிருமியின் ஆதிக்கத்தால் கட்டுண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறது. நாள் ஒவ்வொன்றும் இல்லத்தினில், எம்பிரானின் வாச ஸ்தலமான சாளக்ராம ஆராதனையின் போதில், அவனுக்கு உகந்த திருத் துழாயை அர்ச்சிக்காமல் இதுவரையில் இருந்ததே கிடையாது. கடைகளே இல்லாத போது பூவும், துளசியும் எங்கிருந்து வாங்கி எம்பெருமானுக்குச் சூட்டுவேன், என்று கண்ணீர் உகுத்தார் பெரியவர். அடியேன், அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். 'ஐயா தாங்கள் தினமும் சூட்டிடும் துளசியினால் எம்பெருமான் இன்னும் முழுமை அடைகிறான் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா' என்று கேட்டேன். கண்டிப்பாக இல்லை என்றார் பெரியவர். நம்மாழ்வாரின் திருவாய் மொழி பாசுரத்தில் 'பரிவதில் ஈசன், படியை பண்புடனே பேசி , ஆராதனைக்கு அரியன் இலன்....', என்ற பாசுரத்தின் பொருளை அவரிடம் கூறிட முயன்றேன். 'பரிவு கொள்வதில் அவனை மிஞ்சியவர் எவரும் இலர் என்னும் படியாய் அவனைப் பாடி, ஆராதனைக்கு அரியவன் இல்லாதவன், மிக எளியவன் எம்பிரான் என்று புரிந்து கொண்டோமே என்னில், அதனை விட அவனை ...